பொதுக் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்களில், ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்கள் இடையூறு இல்லாமல் செல்லுமாறு காவல்துறை ஆணையர்களுக்கும், கண்காணிப்பாளர்களுக்கும் டிஜிபி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்யும் போது, 108 ஆம்புலன்ஸ் வந்தது. எடப்பாடி பழனிசாமி அதில் நோயாளி இல்லாமல், வெறும் வாகனத்தை ஓட்டிக்கொண்டு வந்துள்ளதாக குற்றம் சாட்டினார். இப்போது, அவர் பிரசாரம் செய்யும் இடத்தில் ஆம்புலன்ஸ் வந்தால், “நோயாளி இல்லாமல் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதே வாகனத்தில் நோயாளியாக போவார்” என்று மிரட்டல்…
Read more